Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மதவாதத்தை எதிர்த்த ஊடகவியலாளர் சுட்டுக்கொலை!

In இந்தியா
Published: 03:40 GMT, Sep 6, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

மதவாதத்திற்கு எதிராக காரசாரமான கருத்துக்களை எழுதிவந்த மூத்த ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் (வயது-55) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பெங்களூர் ராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சகிதம் அவரது வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாத மூவர், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு சென்றுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து அவரது இல்லத்திற்குச் சென்ற கர்நாட உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி, துப்பாக்கிதரிகளை கைதுசெய்ய தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பத்திரிகைகளில் பணியாற்றி, துணிச்சலுடன் கருத்துக்களை வெளியிட்டு வந்த கௌரி, தற்போது வாராந்த பத்திரிகையொன்றை நடத்தி வருகின்றார். மதவாதம் தலைவிரித்தாடும் இந்தியாவில், அதனை கடுமையாக எதிர்த்து கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இதேவேளை, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பிரஹ்லாத் ஜோஷிக்கு எதிராக எழுதிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடம் கைதுசெய்யப்பட்ட கௌரிக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. எனினும், அவருக்கு மேன்முறையீடு செய்யும் வாய்ப்பை வழங்கிய நீதிமன்றம் பின்னர் அவரை பிணையில் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg