Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இரசிகர்களிடம் இருந்து தப்புமா இலங்கை அணி?

In கிாிக்கட்
Published: 04:00 GMT, Sep 6, 2017 |
0 Comments
1745
icon_com
This post was written by : Anojkiyan
only

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒரேயொரு ரி-ருவென்ரி போட்டி, இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணிக்கு உபுல் தரங்கவும், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமைதாங்கவுள்ளனர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை முழுமையாக இழந்துள்ள இலங்கை அணி, கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் இப்போட்டியிலாவது வெற்றிபெற்று இரசிகர்களை திருப்திபடுத்த இலங்கை அணி தீவிர முயற்சி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்ததால் அதிருப்தியடைந்த இரசிகர்கள், மைதானத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதால் இப்போட்டியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை அதீத திறமையினை வெளிப்படுத்திவரும் இந்திய அணி, அனைத்து தொடர்களையும் வெற்றிக்கொண்டு நாடு திரும்பும் வேட்கையில் உள்ளது.

இலங்கை அணி இறுதியாக விளையாடிய இரு ரி-ருவென்ரி போட்டிகளில் வெற்றியும், இந்திய அணி இறுதியாக விளையாடிய இரு ரி-ருவென்ரி போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg