Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மோடியின் மியன்மார் விஜயம்: ரோஹிங்யா குறித்து அக்கறை

In இந்தியா
Published: 04:21 GMT, Sep 6, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஹிடின் கியாவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

சீனாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற மோடி, அங்கிருந்து நேற்றைய தினம் (செவ்வாய்க்கழமை) மியன்மாருக்கான விஜயத்தை ஆரம்பித்தார்.

நேற்றைய தினம் மியன்மார் ஜனாதிபதியை சந்தித்த மோடி, இரு நாடுகளுக்கும் இடையில் தொடரும் வரலாற்று ரீதியான பிணைப்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

சிறந்த வளங்களை கொண்டுள்ள மியன்மாருடன் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்துக் கொள்வதே மோடியின் இவ் விஜயத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மியன்மாரின் சட்ட ஆலோசகரும் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சாங் சூகியை இன்று சந்திக்கவுள்ள மோடி, ரோஹிங்யா விவகாரம் குறித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மியன்மாரில் ராணுவ ஆட்சி முற்றுப்பெற்றதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கை சுமார் 2.2 பில்லியன் டொலர்கள் அதிகரிப்பை எட்டியுள்ளது. எனினும், இந்திய முதலீட்டிலான திட்டங்கள் குறைவடைந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ராணுவ ஆட்சியில் மியன்மார் இருந்தபோது ஏற்பட்ட மோதலாம் பல்லாயிரக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், சுமார் 40,000 பேர் இந்தியாவிலும் தஞ்சமடைந்தனர். இவர்களை நாட்டிற்கு திருப்பியனுப்ப இந்தியா தீர்மானித்துள்ளதென கடந்த மாதம் மோடி தெரிவித்திருந்தார். இதற்கிடையில், தற்போது ரோஹிங்கா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை காரணமாகவும் பலர் இந்தியாவில் தங்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg