Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மியன்மார் வன்முறை முடிவுற வேண்டும் – ஐ.நா.

In உலகம்
Published: 04:41 GMT, Sep 6, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Suganthini

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் நிலவும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மியன்மார் அதிகாரிகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த மாநிலத்தின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்கக்கூடிய நிலைமை உருவாகின்றது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மியன்மாரில் கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி புதிததாக வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில், ரோஹிங்கியா பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையிலான மோதலின்போது, பொலிஸ் மற்றும் இராணுவச் சோதனைச் சாவடிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து, பெருமளவான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷுக்குச் தப்பிச் செல்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெளிவுபடுத்தியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘மியன்மார் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கு நான் கடிதமொன்றை அனுப்பியுள்ளேன்.

அதில் மியன்மாரில் நிலவும் வன்முறை தொடர்பில் எனது கவலையை வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்நிலையில், வன்முறையை முடிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தியுள்ளேன்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg