Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச அழுத்தத்திற்கு ஒன்றிணைவோம்: ராதாகிருஷ்ணன்

In இலங்கை
Updated: 04:54 GMT, Sep 6, 2017 | Published: 04:54 GMT, Sep 6, 2017 |
1 Comment
1249
This post was written by : Varshini

மியன்மாரில் வாழும் ரோஹிங்யா மக்களை பாதுகாக்க அந்நாட்டு அரசாங்கம் தவறிவிட்டதென்றும், இவ்விடயம் தொடர்பாக சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரோஹிங்யா விவகாரம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப் கால யுத்தத்திற்கு முகங்கொடுத்த இலங்கை மக்களுக்கு அதன் வேதனை நன்கு தெரியுமென குறிப்பிட்டுள்ள ராதாகிருஷ்ணன், ரோஹிங்யா சம்பவத்திற்கு எதிராக நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுத்து, ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகளை அந்நாட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்மூலம், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதோடு, இடம்பெயர்ந்து சென்றவர்களை நாட்டிற்கு அழைத்துவர அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற ரோஹிங்யா மக்களுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதிமுதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை காரணமாக நூற்றிற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் ஒரு இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இச் செயற்பாட்டிற்கு அந்நாட்டு அரசாங்கமும் வாய்மூடி மௌனம் காப்பதாக உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. james