Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரும்புள்ளிகள் மறைய சிறந்த வழிமுறை

In
Updated: 05:09 GMT, Sep 6, 2017 | Published: 05:09 GMT, Sep 6, 2017 |
0 Comments
1303
This post was written by : Kemasiya

பெண்களுக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சினை கரும்புள்ளி தான். கரும்புள்ளி கண்களுக்கு அடியில் ஏற்படலாம். அல்லது முகப்பருக்களின் பின்னர் முகத்தில் ஆங்காங்கே எற்படலாம் . எவ்வாறு ஏற்படினும் குறித்த கரும்புள்ளியினை எவ்வாற இல்லாது செய்யது என நோக்குவோம்.

 பாலுடன் கோதுமை கலந்து அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி வந்தால் சில நாட்களில் கரும் புள்ளி காணாமல் போய்விடும்.

 வெள்ளரிச் சாற்றை முல்தானி மெட்டியுடன் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இதை  செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

எலுமிச்சம் பழச்சாறு மற்றும் கடலை எண்ணய் சம அளவு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தேய்த்து காய்ந்ததும் அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.

சந்தனம் மற்றும் மஞ்சள் தூள்களை சம அளவு எடுத்து அதனுடன் பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி பின்னர் தண்ணீரால் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

இவ்வாற தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை இல்லாது செய்யலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg