Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீஸ் கேக் இலகுவாக செய்வது எப்படி?

In
Updated: 05:21 GMT, Sep 6, 2017 | Published: 05:20 GMT, Sep 6, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Kemasiya
sdgser

தேவையான பொருட்கள்

பிஸ்கட் தூள்  – ஒன்றரைக் கோப்பை

சர்க்கரை – கால் கோப்பை

உருக்கிய வெண்ணெய் – கால் கோப்பை

க்ரீம் சீஸ் – 8 துண்டுள்ள இரண்டு பாக்கெட்

புளித்த கிரீம் – அரைக்கோப்பை

முட்டை – இரண்டு

சர்க்கரை – ஒரு கோப்பை

சோள மாவு – ஒரு மேசைக்கரண்டி

துருவிய எலுமிச்சை தோல் – ஒரு பழம்

வென்னிலா எசன்ஸ் – அரைதேக்கரண்டி

புளூ பெர்ரி – ஒன்றரைக்கோப்பை
சர்க்கரை – அரைக்கோப்பை

எலுமிச்சைச்சாறு – ஒரு மேசைக்கரண்டி

தண்ணீர் – இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை

•ஒரு கோப்பையில் பிஸ்கட் தூளுடன் சர்க்கரை போட்டு உருக்கிய சூடான வெண்ணெயை ஊற்றி நன்கு கலக்கவும். அல்லது மிக்ஸரில் பிஸ்கட்டுகளைப் போட்டு தூளாக்கி அதனுடன் சர்க்கரையையும் வெண்ணெயையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

• இதனை சீஸ் கேக் செய்வதெற்கென்றே உள்ள மீடியமான அளவுள்ள பேனில் கொட்டி சமமாக பரவலாக தட்டவும்.

• பிறகு இதை 350 டிகிரி சூடாக்கிய அவனில் வைத்து பேக் செய்யவும்.

• ஐந்து அல்லது ஆறு நிமிடத்தில் நல்ல பிரவுன் கலரில் ஆனவுடன் வெளியில் எடுத்து விடவும்.

• பின்னர் பிஸ்கட் தூளாக்கிய மிக்ஸரில் முதலில் க்ரீம் சீஸையும்இ சவர் க்ரீமையும் சேர்த்து போட்டு நன்கு கலக்கவும்.

• பின்னர் சர்க்கரை, சோளமாவு, துருவிய எலுமிச்சை தோல், முட்டை மற்றும் வென்னிலா எசன்ஸ் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கவும்.

• பின்னர் இந்த கலவையை தயாராகியுள்ள கிரஸ்ட்டில் பரவலாக ஊற்றி ஒரு கரண்டியின் உதவியால் சமப்படுத்தவும்.

• பின்னர்அவனை 300 டிகிரி குல் சூடாக்கி அதில் வைத்து ஒரு மணி நேரம் வரை பேக் செய்யவும். அல்லது க்ரீம் கலவை நன்கு கெட்டியாகும் வரைவைத்திருந்து வெளியில் எடுத்து ஆறவைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.

• இதற்கிடையில் ஒரு சிறிய பாத்திரத்தில் பழங்களுடன் சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சை சாறு ஆகியவற்றைப் போட்டு கெட்டியான சிரப்பாகும் வரை மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி விடவும்.

• நன்கு குளிர்ந்து செட்டிலான கேக்கை பரிமாறும் தட்டில் வைத்து துண்டுகள் போட்டு பழச்சிரப்பை மேலாக ஊற்றி பரிமாறவும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg