Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உண்மையிலேயே ‘இஞ்சி இடுப்பழகி’ ஆகிவிட்டாராம் அனுஷ்கா

In சினிமா
Updated: 11:28 GMT, Sep 6, 2017 | Published: 07:08 GMT, Sep 6, 2017 |
0 Comments
1518
icon_com
This post was written by : Varothayan
anushka-shetty-1

புதிது புதிதாக எத்தனை நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் இறக்குமதியானாலும் அனுஷ்காவின் மதிப்பு கொஞ்சமும் ரசிகர்களிடம் குறையவில்லை என்பது தான் உண்மை.

அதற்கு காரணம் அவரது கிளாமரான தோற்றம் மட்டுமல்ல அசத்தும் நடிப்பும் தான். கரெக்டருக்காக எதையும் செய்யத்துணியும் நடிகைகளில் அவர் முக்கியமானவர். அந்த வகையிலேயே பாகுபலி பாகம் ஒன்றில் கிழவியாக நடித்திருந்தார்.

அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக எந்த நடிகையும் செய்யத்துணியாத காரியத்தைச் செய்தார். தனது உடல் எடையை ஏற்றினார். இலகுவாக உடலை ஏற்றியவருக்கு உடலைக்குறைப்பதில் தான் சிக்கல் ஏற்பட்டது.

ஏற்கனவே, வயது வேறு ஏறிக்கொண்டிருக்க அனுஷ்காவிற்கான புதிய வாய்ப்புக்களும் பருமனான அவரின் உடல் தோற்றத்தால் இல்லாது போனது. இந்நிலையில், ‘பாகுபலி 2′ இற்கு பிறகு அவர் ‘பாக்மதி’ என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு உடல் எடை குறைத்த பிறகே படங்களில் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார்.

எனவே, தீவிர உடற்பயிற்சிக்காக ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் அனுஷ்கா அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை அமைத்தார். ஒரு பயிற்சியாளரையும் நியமித்தார். இங்கு தினமும் இடைவிடாமல் பயிற்சி செய்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பல மாதங்களாக அவர் செய்த பயிற்சியால் எடை குறைந்து பழைய தோற்றத்துக்கு வந்திருக்கிறார்.

இதுவரை புதிய படங்களை ஏற்காமல் இருந்த அனுஷ்கா, இப்போது புதிய படங்களுக்கு கதைகேட்க தொடங்கி இருக்கிறார். ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் தமிழிலும் அவரை எதிர்பார்க்கலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg