Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பத்து ஒவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்: கிரிக்கெட் உலகில் புதிய அத்தியாயம் ஆரம்பம்

In கிாிக்கட்
Published: 06:10 GMT, Sep 6, 2017 |
0 Comments
7078
icon_com
This post was written by : Anojkiyan
she

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் பங்கேற்கும் பத்து ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர், நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராட்சியத்தின் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இவ்வருட டிசம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

10 ஓவர்கள், 7 அணிகள், 90 நிமிடங்கள் என மிகக் குறுகிய நேர எல்லைக்குள் 4 நாட்கள் இத்தொடர் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சயிட் அப்ரிடி, குமார் சங்கக்கார, கிறிஸ் கெயில், விரேந்தர் சேவாக் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பஞ்சாபிஸ், பக்தூன்ஸ், மராத்தா, பங்லாஸ், லங்கன்ஸ், சிந்திஸ் மற்றும் கேரலைடிஸ் என ஏழு அணிகளின் பங்குபற்றுதலுடன் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளது.

பக்தூன்ஸ் அணியின் தலைவராக சயிட் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பங்லாஸ் அணித் தலைவராக சகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏனைய அணிகளுக்கான வீரர்கள் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ள ஏலத்தில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg