Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள்

In
Published: 06:39 GMT, Sep 6, 2017 |
0 Comments
1262
icon_com
This post was written by : Kemasiya
dgg

விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டசத்து உணவுகளை சாப்பிடுவது கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவு பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டசத்து உணவுகளை சாப்பிடுவது கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

விட்டமின்-சி மற்றும்  விட்டமின்-ஈ, கரோட்டினாய்டுகள், பீட்டா கரோட்டின், லூடீன் மற்றும் ஜியாசாந்தின் துத்தநாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய உணவு பொருட்கள் கண்களின் நலனை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. விட்டமின்கள் பி6,  பி9, பி12, ஆகியவற்றில் போலிக் அமிலம் நிரம்பியிருக்கிறது. ஆகையால் விட்டமின் ஏ, சி மற்றும் ஈ நிறைந்த பழங்கள் காய்கறிகளை சாப்பிட்டுவர வேண்டும்.

அடர் பச்சை நிற காய்கறிகளில் விட்டமின் ஏ, ஈ மற்றும் பி அதிகம் நிறைந்திருக்கிறது. அவைகளை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகளை சாப்பிடுவதன் மூலம் கண் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் தவிர்க்கலாம்.

இறைச்சி வகைகள் முட்டை பால் பொருட்கள் வேர்க்கடலை மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றில் துத்தநாகம் அதிகம் இருக்கிறது. விட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. வாழைப்பழங்கள் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றில் விட்டமின் 6 உள்ளடங்கியிருக்கிறது. சிட்ரஸ் பழங்கள் பச்சை இலை காய்கறிகள் காளான்கள் பட்டாணி போன்றவற்றில் போலிக் அமிலம் நிறைந்திருக்கிறது.

அவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். புழுங்கல் அரிசி கோதுமை ரொட்டி பார்லி போன்ற தானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேவேளையில் சுத்திகரிக்கப்பட்ட காபோவைதரேட் உள்ளடங்கிய உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வெள்ளை அரிசி சாதத்தை தவிர்ப்பது நல்லது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg