Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய குடியேற்றங்களை கட்டுப்படுத்த பிரித்தானியா திட்டம்!

In
Updated: 07:23 GMT, Sep 6, 2017 | Published: 07:22 GMT, Sep 6, 2017 |
0 Comments
1328
This post was written by : Elakkiya

பிரெக்சிற்றை தொடர்ந்து ஐரோப்பாவிலிருந்து வருகைதரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கிலான முன்மொழிவுகள் பிரித்தானியாவின் பிரெக்சிற் திட்ட வரைபில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய உள்துறை அமைச்சிலிருந்து பிரெக்சிற் திட்ட வரைபு கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மேற்படி தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தரவுகளின் பிரகாரம், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெறியேறும் போது தடையற்ற பயணம் முடிவடையும் என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதன்பின்னர், பொருளாதாரம் மற்றும் சமூக தேவைகளை அடிப்படையாக கொண்ட தேர்வு அணுகுமுறையை பிரித்தானியா கடைப்பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி தொழில்துறைகளில் பற்றாக்குறை இன்றிய தொழிலாளர்களின் அணுகல் பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதாக அமையலாம் என்றும் மேற்படி திட்ட வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கசிவடைந்த ஆவணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிபிசி குறித்த ஆவணங்களில் அமைச்சர்களின் கையெழுத்து இல்லை என்று கூறுகின்றது. எனினும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் கசிந்த வரைவு ஆவணங்கள் தொடர்பில் கருத்து வெளியிடவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg