Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய இடமாற்றக் கொள்கை வகுப்பிற்கு தமிழாசிரியர் சங்கம் வரவேற்பு!

In இலங்கை
Updated: 08:49 GMT, Sep 6, 2017 | Published: 08:19 GMT, Sep 6, 2017 |
0 Comments
1273
This post was written by : Ravivarman

கிழக்கு மாகாணத்தில் அதிபர்கள் தரத்திலுள்ளோருக்காக வகுக்கப்பட்டுள்ள புதிய இடமாற்றக் கொள்கை குறித்து கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் வரவேற்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று (புதன்கிழமை) சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜாவினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அதிபர்கள் முறையற்ற இடமாற்றங்களுக்கு உட்பட்டு முரண்பாடுகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளான விடயம் புதிய இடமாற்றக் கொள்கை வகுக்கப்பட்டதின் மூலம் முற்றாக முடிவுக்கு வந்துள்ளது.

ஒரே பாடசாலையில் கடமையாற்றும் அதிபர்களுக்கும், அலுவலகங்களில் கடமையாற்றும் கல்வி நிருவாக அதிகாரிகளுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்படாததால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்விப் பின்னடைவு ஏற்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.

இந்த விடயத்தில் இடமாற்றத்திற்கான மாகாணத்திற்கென்று தனித்துவமான கொள்கையை முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையிலான மாகாணசபை நிருவாகமும் மாகாணக் கல்வியமைச்சும் தற்போது வடிவமைத்துள்ளது.

அதன்மூலம் தற்போது பாடசாலை அதிபர்களிடமிருந்து இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கு அமைய எதிர்வருகின்ற ஜனவரியோடு அதிபர் இடமாற்ற முரண்பாடுகள் முடிவுக்கு வந்து விடும்.

அதன் பின்னர் கல்விச் செயற்பாடுகளும் கல்வி அபிவிருத்தியும் சீராக இடம்பெறும்” என மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg