Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய கப்பல் தளங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வேலைத்திட்டம்

In
Updated: 09:43 GMT, Sep 6, 2017 | Published: 09:40 GMT, Sep 6, 2017 |
0 Comments
1276
This post was written by : Elakkiya

பிரித்தானிய கப்பல் தளங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலான புதிய தேசிய கப்பல் கட்டுமான யுக்தி பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் மைக்கேல் ஃபலோனால் வெளியிடப்படவுள்ளது

இந்த திட்டங்களின் கீழ் பிரித்தானிய அரசாங்கம் குறைந்தது ஐந்து போர் கப்பல்களை வாங்கும். அத்துடன், கட்டுமாண பணிகள் பிரித்தானியா முழுவதும் உள்ள கப்பல் கட்டுமான தளங்களுடன் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வகையான 31e போர்க் கப்பலின் முதல்தொகுதி ஏற்றுமதி சந்தையை மனதில்கொண்டு வடிவமைக்கப்படும் என்றும் மைக்கேல் ஃபலோன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் பில்லியன் பவுண்ட்ஸ்களை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் கையாளப்படவுள்ளது.

இந்த புதிய போர்க்கப்பல்கள் வெவ்வேறு கப்பல் தளங்களில் உருவாக்கப்படும் எனி;னும் நிறைவில் மத்திய தளத்தில் ஒன்றுசேர்க்கப்பட்டு 2023 ஆம் ஆண்டளவில் சேவைக்கு தயாராகும் என்றும் கூறப்படுகின்றது.

ஒவ்வொரு போர்க் கப்பலுக்கும் தலா 250 மில்லியன் பவுண்ட்ஸ்கள் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg