Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு

In கனடா
Updated: 10:11 GMT, Sep 6, 2017 | Published: 10:11 GMT, Sep 6, 2017 |
0 Comments
1244
This post was written by : Anojkiyan

மார்க்கம் மற்றும் வாஹன் ஆகிய இரண்டு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டட மூன்று ஆண்களை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

நெடுஞ்சாலை 7-கிழக்கு, மார்க்கம் வீதி மேற்கு பகுதியில் அமைந்துள்ள வங்கி கிளையிலும், டவ்றின் வீதி மற்றும் சம்மர்றிட்ஜ் டிரைவ் தோன்ஹில்லில் அமைந்துள்ள மற்றொரு கிளையிலுமே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

முகமூடி அணிந்த மூன்று ஆண்கள் வங்கிக்குள் நுழைந்தது கத்திகளை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டு சென்றதாக பணத்தை பறிகொடுத்தவர்கள் சாட்சியமளித்துள்ளனர். இவர்கள் கரும் பச்சை ஹொன்டா சிவிக் வாகனத்தில் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 20-28ற்கு இடைப்பட்ட வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg