Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் மரபுகளை பாதுகாக்க கொமர்ஷல் வங்கி வழங்கும் நிதியுதவி

In வணிகம்
Updated: 09:57 GMT, Sep 6, 2017 | Published: 09:57 GMT, Sep 6, 2017 |
0 Comments
1321
This post was written by : Kemasiya

பாரம்பரிய பொம்மலாட்ட கலைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் அம்பலாங்கொடையில் ஆரம்பிக்கப்படவுள்ள பொம்மலாட்ட நூதனசாலைக்கான நிதி உதவியை கொமர்ஷல் வங்கி வழங்கியுள்ளது.

கொமர்ஷல் வங்கி நாட்டின் பாரம்பரிய மரபுரிமைகளை பேணி பாதுகாப்பதற்கு தேவையான உதவிகளை வழமையாக வழங்கி வருகின்றது. பேராதனை பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பட்டதாரியான கன்வாரி சுபுன் காமினி என்பவர் முன்வைத்துள்ள யோசனைக்கு உதவ கொமர்ஷல் வங்கி முன்வந்துள்ளது.

இலங்கையின் பொம்மலாட்ட கலையின் தந்தை என வர்ணிக்கப்படும் பொடி சிறினா குருனான்சேயின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர். தென்பகுதி கரையோர நகரான இங்கு பொம்மலாட்ட நூதனசாலை மற்றும் அரங்கம் என்பவற்றை நிறுவவேண்டும் என்பதே இந்த யோசனையாகும்.

சர்வோதையா நிலையத்திடம் இருந்து குத்தகைக்குப் பெறப்பட்ட ஒரு கட்டிடத்தில் இந்த நூதனசாலை அமையவுள்ளத. கொழும்பு கட்புல மற்றும் அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் இதற்கான ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.

உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கான பொம்மலாட்ட நிகழ்வுகளை அரங்கேற்ற இவர்கள் முன் வந்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg