Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திர தினத்தை கொண்டாடும் சுவாஸிலாந்து!

In
Updated: 12:28 GMT, Sep 6, 2017 | Published: 10:27 GMT, Sep 6, 2017 |
0 Comments
1276
icon_com
This post was written by : Kemasiya
450px-Flag_of_Swaziland.svg

மொசாம்பிக் என்னும் எல்லையில் பல மலைகளும், பல ஆறுகளையும் பார்ப்பவர் கண்களை வியக்க வைக்கும் அளவிலான இயற்கைக் காட்சிகளையும் கொண்டமைந்துள்ள  சுவாஸிலாந்து நாடானது தனது சுதந்திர தினத்தை இன்று (புதன்கிழமை)  கொண்டாடுகின்றது.

உம்பானே என்னும் நகரம்  சுவாஸிலாந்து நாட்டின் தலைநகராக விளங்குவதோடு ஆபிரிக்காவின் ஒரு செல்வங்கொழிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கின்றது. இந்த நாட்டிலே 82.70 வீதம் மக்கள் கிறிஸ்தவ மதத்தையும் 0.95வீதம் மக்கள் இஸ்லாம் மதத்தையும் 0.5 வீதம் மக்கள் பஹாய் மதத்தையும் மற்றும் 0.15வீத மக்கள் இந்து மதத்தையும் பின்பற்றுகின்றார்கள்.

1894 முதல் 1899 வரையிலான காலப்பகுதியில்  சுவாஸிலாந்து நாட்டினை தென் ஆபிரிக்கா கைப்பற்றியது.அதன் பின்னர் போயர் என்னும் போரானது நடைபெற்றதையடுத்து அடுத்து 1902இல்  சுவாஸிலாந்து பிரித்தானியா நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டதோடு 1968ஆம் ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி அன்று சுவாஸிலாந்து நாடானது சுயாதீன நாடாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சுவாஸிலாந்து நாடானது தென்னாபிரிக்காவில் ஒரு சிறிய நாடாக காணப்படுவதோடு, உலகின் முழுமையான முடியாட்சிகளில் ஒன்றான நாடாகவும் விளங்குகின்றது. சுவாஸிலாந்து சிறிய நாடாக காணப்படினும் அதன் மிகப்பெரிய சொத்தாக இருப்பது அந்நாட்டின் சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

அனைவரின் கவனத்தையும் ஒரே பக்கமாக ஈர்க்கும் வகையிலான பல்வேறு கவர்ச்சிகரமான அழகிய நிலப்பரப்புகளுடனான தரைத் தோற்றம் வனவிலங்குகள் இயற்கை மற்றும் அருங்காட்சியகங்கள் போன்ற அற்புதமான இடங்களையும் கொண்டு விளங்குகின்ற நாடு என்ற பெருமையையும் சுவாஸிலாந்துகொண்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg