Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெரீனாவில் பதற்றம் : மாணவர்கள் கொந்தளிப்பு

In இந்தியா
Updated: 20:05 GMT, Sep 6, 2017 | Published: 11:39 GMT, Sep 6, 2017 |
0 Comments
1322
This post was written by : elayathambi

சென்னை மெரீனா கடற்கரையில் பதற்றநிலை தோன்றியுள்ளது. மாணவி அனிதாவின் தற்கொலையை அடுத்து தமிழகத்தில் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தின் தொடர்ச்சியாக இது அமைந்திருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மெரீனாவில் போராட்டம் ஆரம்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அங்கு பொலிசார் நேற்றே குவிக்கப்பட்டியோருந்தனர், அரியலூர் அனிதாவின் தற்கொலையை அடுத்து நான்காம் நாளாக நேற்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது  மெரினாவில் போராட்டம் வெடிக்காமல்  தடுக்க  காவல்துறையினர்  குவிக்கப்பட்டிருந்தனர். மெரீனா சுற்றுபுறத்தின் போக்குவரத்துக்களும் தடை செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை இன்று மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி அருகே கூடிய முப்பதிற்கும் அதிகமான  மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நீட் தேர்வுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டதில் பெருமளவிலான சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நீட் தேர்வை முற்றாக எதிர்த்தவர் ஜெயலலிதா என்பதால்தான் தாங்கள் இந்த போராட்டத்தை அவரது சமாதி அருகே இன்று ஆரம்பித்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்ட களத்திற்கு விரைந்த தமிழக பொலிசார் வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றினர். இன் நடவடிக்கையின் போது சில மாணவர்கள் மயக்கமடைந்ததாகவும் இதனால் பதட்டம் வலுவடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg