Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அண்டவெளியில் சாதனை படைத்த முதற்பெண்! – அழைப்பை ஏற்படுத்திய வல்லரசு அதிபர்

In அறிவியல்
Updated: 11:55 GMT, Sep 6, 2017 | Published: 11:55 GMT, Sep 6, 2017 |
0 Comments
1309
This post was written by : Puvanes

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த முதற்பெண் என்ற சாதனையை அமெரிக்காவின் பெக்கி விட்சன் படைத்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு விண்வெளிப்பயணத்தினை மேற்கொண்டிருந்த இவர், வெற்றிகரமாக தனது விண்வெளிப்பயணத்தினை நிறைவு செய்து கொண்டு ரஷ்யாவின் விண்வெளி அமைப்பிற்கு திரும்பி வந்துள்ளார்.

இதுவரையில் மொத்தமாக 4623 தடவைகள் பூமியைச் சுற்றி வந்துள்ள விட்சன், மொத்தமாக 665 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்துள்ளார்.

மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதற்பெண் தளபதியாக பணியாற்றியவரும் பெக்கி விட்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெக்கி விட்சன் பூமியில் கால் பதித்த போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg