Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டாக்கா திட்டம் ரத்துச் செய்யப்பட்டமைக்கு கண்டனம்

In உலகம்
Updated: 11:52 GMT, Sep 6, 2017 | Published: 11:52 GMT, Sep 6, 2017 |
0 Comments
1247
This post was written by : Suganthini

அமெரிக்காவில் இளம் குடியேற்றவாசிகளை பாதுகாக்கும் திட்டத்தை ரத்துச் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மெக்ஸிக்கோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மீது தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

டாக்கா எனப்படும் இந்தத் திட்டமானது, 2012ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறும் மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை ரத்துச் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமான சிறுபிராயத்தினர் நுழைவதைக் கட்டுப்படுத்தும் வகையில்இ சட்டத்தை மாற்றியமைப்பதற்கு 6 மாதகால அவகாசத்தை காங்கிரஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார் என அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போதுஇ சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் மீதான நடவடிக்கையை முன்வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் நாடும் கடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg