Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்பாக செயற்பட்ட வவுனியா பொலிஸாருக்கு கௌரவிப்பு!

In இலங்கை
Updated: 12:05 GMT, Sep 6, 2017 | Published: 12:05 GMT, Sep 6, 2017 |
0 Comments
1280
This post was written by : Ravivarman

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 151 வது வருட நிறைவை முன்னிட்டு வவுனியாவில் குற்றங்களை கட்டுப்படுத்தி சிறப்பாகச் செயற்பட்ட பொலிஸாரைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைவாக உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெனாண்டோ தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடந்த மாதத்தில் வவுனியாவில் குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பாகச் செயற்பட்ட பத்து பொலிஸாருக்கு பணப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடமையிலிருக்கும் போது உயிர்த்தியாகம் செய்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுடைய குறைகளை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

DSC_0316 DSC_0318 DSC_0320 DSC_0322

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg