Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வேற்றுக்கிரகவாசிகளிடம் இருந்து வந்த தகவல்! – அழிவின் ஆரம்பம் என அதிர்ச்சி எச்சரிக்கை

In அறிவியல்
Published: 12:35 GMT, Sep 6, 2017 |
0 Comments
3557
icon_com
This post was written by : Puvanes
world_end001

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் மிக முக்கியமான ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் தலைசிறந்த இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் தலைமையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வேற்றுக்கிரக தேடல் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.

குறித்த ஆய்வின் மூலமாக அண்மையில் 15 அலைவரிசை வெடிப்புகளை பிரேக்த்ரூ லிசன் ஆய்வுக்குழு கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து, அந்த அலைவரிசைகள் வேற்றுக்கிரகவாசிகளின் உருவாக்கப்பட்ட சமிஞ்ஞைகள் எனவும், இது வேற்றுக்கிரகவாசிகளில் இருப்பினை உறுதிபடுத்தும் ஆதாரம் எனவும் ஆய்வாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, பூமிவாசிகள் வேற்றுக்கிரகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவது, பூமிக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்துவதன் ஆரம்பம் என அண்மையில் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், இதன்காரணமான மனித இனத்தின் அழிவினை யாராலும் தடுக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவலை அவர் குறிப்பிட்டுள்ளதோடு விண்வெளிக்கு செல்லாத வரையில் மனித குலம் தப்ப முடியாது எனவும் அறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள அலைவரிசை சமிஞ்ஞைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg