Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் – பைசர் முஸ்தபா

In இலங்கை
Updated: 13:11 GMT, Sep 6, 2017 | Published: 13:11 GMT, Sep 6, 2017 |
0 Comments
1386
This post was written by : Puvanes

தேர்தல்களை தள்ளிப்போடுவது அரசாங்கத்தில் இலக்கு அல்ல என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரதிநிதிகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் எனவும் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் இது குறித்து அமைச்சரவையிலும் விஷேட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அனைத்து தரப்பு கட்சிகளுடனும் ஆலோசனைகள் உள்வாங்கப்படுவதோடு, பொதுமக்களிடமும் இது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் எனவும் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg