Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியன்மார் பற்றி தவறான செய்திகள் பரவுகின்றன – வாய் திறக்கிறார் ஆங் சாங்க் சூகி

In
Updated: 13:56 GMT, Sep 6, 2017 | Published: 13:56 GMT, Sep 6, 2017 |
0 Comments
1332
This post was written by : elayathambi

மியன்மாரில் வெடித்துள்ள கலவரம் குறித்து நீண்ட மௌனத்தின் பின் ஆங் சாங்க் சூகி  இன்று செய்தி வெளியிட்டுள்ளார். ரோகிங்கியா முஸ்லீம்கள் பலத்த வன்முறைக்கு உடபட்டு வருவதும், அகதிகளாக அவர்கள் தப்பித்து ஓடுவதும் உலகை அதிர வைத்திருக்கும் நிலையில், தனது மௌனத்தை ஆங் சாங்க் சூகி கலைத்துள்ளார்.

கடந்த மாத இறுதி முதல் வெளியாகி வரும் மியன்மார் குறித்த தகவல்கள் தவறானவை என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூகி இன்று கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்களே இத்தகைய பொய்யான தகவல்களைப் பரப்புவதாக குற்றம் சுமத்தியுள்ள  அவர் இதனால் பயன்பெறுவது கிளர்ச்சியாளர்களே எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

துருக்கி பிரதமருடனான தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்திருப்பதாக பிபிசி சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த மாத இறுதியில் ஆரம்பித்த கலவரத்தை அடுத்து பல்லாயிரக் கணக்கான அகதிகள் நாட்டை விட்டுத் தப்பி ஓடியுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 123,000 அகதிகள் வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை மௌனம் காத்த சூகி உண்மைகளை மூடி மறைக்கும் விதத்தில் இவ்வாறு கூறியிருப்பது பலத்த விமர்னங்களுக்கு உள்ளாகக் கூடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg