Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

எர்மா புயல் கரீபியப் பிராந்தியம் நோக்கி நகர்வு

In உலகம்
Updated: 20:07 GMT, Sep 6, 2017 | Published: 16:42 GMT, Sep 6, 2017 |
0 Comments
2041
icon_com
This post was written by : Sivaguru Siva
_97692018_martinreuters

அதி தீவிர வலுவுடன் அத்திலாந்திக் சமுத்திரத்தில் நகர்ந்துவரும் எர்மா புயல் இன்று கரீபியப் பிராந்திய நாடுகளை மிகமோசமாக தாக்க ஆரம்பித்துள்ளது. எர்மாவின் தாக்குதல் காரணமாக சென்ற் மார்ட்டின் மற்றும் பாத்தலேமி ஆகிய தீவுகளில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தப்புயலின் அதிதீவிரம் காரணமாக அதற்கு புயல்சின்னங்களுக்கு வழங்கப்படும் அதியுச்சஇடமான ஐந்தாம் வழங்கப்பட்டுள்ளது. எர்மா புயல்காற்றின் வேகம் மணிக்கு சுமார் 300 கிலோமீற்றர்வேகம் வரை வீசிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எர்மாவின் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் தீவுகள் பிரான்சின் ஆட்சிஅதிகாரத்துக்கு உட்பட்டநாடுகள் என்பதால் மீட்புப்பணிகள் குறித்து பிரான்ஸ் கவனமெடுத்துள்ளது.

தற்போது போர்த்தோ ரிக்கோவை நோக்கி நகரும் இந்தப்பபுயல் எதிர்வரும் ஞாயிறன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்குமென எதிர்பார்க்கபடும் நிலையில் அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg