Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்சரிவு அபாயம்- மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

In இலங்கை
Updated: 05:04 GMT, Sep 7, 2017 | Published: 02:51 GMT, Sep 7, 2017 |
0 Comments
1264
This post was written by : Elakkiya

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண்சரிவு, வெள்ள அனர்த்தங்கள் ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக தேசிய கட்டட ஆய்வு மையம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ள பகுதிகளில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட, அயகம, கிரிஉல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காலி மாவட்டத்தின் நாகொடை பிரதேச செயலாளர் பிரிவிலும், களுத்துறை மாவட்டத்தின் பாலின்தனுவா, வலல்லாவிட மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடைமழை தொடர்ந்து பெய்யும் எனில் ஆபத்தான இடங்களில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg