Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஊடகவியலாளரின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்

In இந்தியா
Published: 04:10 GMT, Sep 7, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Kemasiya

கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் உடல்  அரசு மரியாதையுடன் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த கவுரி லங்கேஷ் (வயது 55) என்ற பத்திரிகையாளர் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மதவாத கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வந்தார். அவர் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுரி லங்கேஷ் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கண்தானம் செய்திருந்ததால் முன்னதாக டாக்டர்கள் அவரது கண்களை எடுத்துச் சென்றனர். கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அமைச்சர்கள் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய பிரமுகர்கள் எழுத்தாளர்கள் கன்னட திரையுலகினர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க கவுரி லங்கேசின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் (தி.மு.க), டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க.அம்மா), திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) தெகலான்பாகவி (எஸ்.டி.பி.ஐ.), நிஜாமுதீன் (இந்திய தேசிய லீக்), சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் மோகன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg