Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரீபியன் கடல் பகுதியை உலுக்கும் ‘எர்மா’ – ஏழு பேர் உயிரிழப்பு

In
Published: 04:31 GMT, Sep 7, 2017 |
0 Comments
1410
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

வடக்கு அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த ‘எர்மா’ புயலின் தாக்கத்தினால், கரீபியன் கடல் பகுதியை அண்டிய தீவுகளில் வாழும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான செயிண்ட் மார்டின் தீவுகளையே இந்த புயல் கடுமையாக தாக்கியுள்ளது. அத்தோடு. குறித்த பகுதியில் சுழல் காற்றுடன் அடை மழை பெய்து வருவதால் வீடுகள், வாகனங்கள் மற்றும் வீதிகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மின்சாரம் இன்றி அவதிப்படுவதோடு, மின் இணைப்பு மேலும் சில நாட்களுக்கு துண்டிக்கப்படலாமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐந்து நிலைகளை கொண்ட எர்மா புயலின் அதிகவேக தாக்கமே இதுவென தெரிவிக்கப்படுகிறது. இப்புயல் தற்போது அமெரிக்காவின் வடக்கு எல்லைப்பகுதியான Puerto Rico பகுதியை கடப்பதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் நாடுகளான ஹைதி, கியூபா, டொமிகள் குடியரசு மற்றும் புயிட்ரோ ரிகோ ஆகிய நாடுகளை இர்மா புயல் தாக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மணிக்கு 295 கிலோமீற்றர் வேகத்தில் இப் புயல் காற்று வீசி வரும் நிலையில், பல கட்டடங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன. காற்றின் வேகம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் உயிர் இழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg