Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களைகட்டப்போகும் இந்தியா-அவுஸ்ரேலிய தொடர்: போட்டி அட்டவணை வெளியீடு

In கிாிக்கட்
Updated: 07:35 GMT, Sep 7, 2017 | Published: 05:44 GMT, Sep 7, 2017 |
0 Comments
3408
This post was written by : Anojkiyan
adh

இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலிய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரிலும் விளையாடவுள்ளது.

இதற்கமைய இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் எதிர்வரும் 17ஆம் பகல்-இரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி கொல்கத்தா மைதானத்திலும், மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி இந்தூர் மைதானத்திலும், நான்காவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி பெங்களூர் மைதானத்திலும், இறுதியும் ஐந்தாவதும் ஒருநாள் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி நாக்பூர் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்டையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி ரஞ்சி மைதானத்திலும், இரண்டாவது ரி-ருவென்ரி போட்டி ஒக்டோபர் 10ஆம் திகதி கவுகாத்தி மைதானத்திலும், ஒக்டோபர் 13ஆம் திகதி ஐதராபாத் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான விளையாடுவதால் இப்போட்டி இரசிகர்களுக்கு பெரும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg