Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டரை மணிநேரம் விளையாடி 4 கிலோ எடையை குறைத்த அவுஸ்ரேலிய வீரர்

In கிாிக்கட்
Updated: 06:15 GMT, Sep 7, 2017 | Published: 06:15 GMT, Sep 7, 2017 |
0 Comments
2080
This post was written by : Anojkiyan

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டரை மணி நேரம் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய வீரர் ஹேண்ட்ஸ்கோம்ப், 4.5 கிலோ எடையை இழந்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிட்டகாங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின், முதல் இன்னிங்ஸின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சுமார் இரண்டரை மணி நேரம் துடுப்பெடுத்தாடிய ஹேண்ட்ஸ்கோம்ப், கடும் வெப்பத்தின் காரணமாக வியர்வையால் நனைந்தார்.

ஆனால் அவர் வெப்பத்தை சமாளிக்க அடிக்கடி ஐஸ் கட்டி பை வைத்து வெப்பத்தை தணிக்க முயற்சித்த போதும் அது கைக்கூடவில்லை. இறுதியில் இரண்டரை மணி நேரம் வெயிலில் நின்று விளையாடியதன் காரணமாக அவரது எடையில் 4.5 கிலோ குறைந்துவிட்டது.

ஹேண்ட்ஸ்கோம்ப், முதல் இன்னிங்ஸிற்காக 144 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்ரிகள் அடங்களாக 82 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg