Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரையிறுதியில் வீனசுடன் மோதல்: முதல் முயற்சியிலேயே வெற்றிபெறுவாரா ஸ்டீபன்ஸ்?

In டெனிஸ்
Updated: 07:26 GMT, Sep 7, 2017 | Published: 07:26 GMT, Sep 7, 2017 |
0 Comments
1170
This post was written by : Anojkiyan

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், சக நாட்டு நட்சத்திர வீராங்கனையான வீனஸ் வில்லியம்சை எதிர்த்து விளையாடவுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், 83ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், லாத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்தோவா எதிர்கொண்டார்.

3 செட் வரை நீடித்த இந்த விறுவிறுப்பான மோதலில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3, 3-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் செவஸ்தோவாவை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதற்கு முன் நடைபெற்ற காலிறுதி போட்டியில், செக்குடியரசின் பெட்ரா குவிடோவாவை வீனஸ் வில்லியம்ஸ் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg