Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பெண்கள் மாறுவதற்கு குடும்ப சூழ்நிலையே காரணம்!

In இலங்கை
Updated: 07:57 GMT, Sep 7, 2017 | Published: 07:54 GMT, Sep 7, 2017 |
0 Comments
1325
icon_com
This post was written by : Puvanes
jirunikka001

தவறு செய்தவர்களாக அடையாளம் காணப்பட்டு சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் எவரும் மீளவும் தவறிழைக்கவில்லை என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பணி மேற்பார்வையாளர் எஸ். ஜரோனிக்கா தெரிவித்தார்.

சமுதாயஞ்சார் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் பெண்கள் குறித்து தகவல் வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போது,

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 பெண்கள் சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு தவறாளர்களாக இனங்காணப்பட்டிருந்தார்கள்.

இப்பெண்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய சமுதாயஞ்சார் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதன் பின்னர் மீண்டும் குடும்பங்களோடு இணைக்கப்பட்டனர்.

பெண்கள் தவறாளர்களாக மாறுவதற்கு குடும்ப சூழ்நிலையே காரணமாய் அமைந்து விடுகின்றது. சட்டவிரோத சாராய விற்பனையில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றார்கள் என்பதே சரியானது.

குடும்ப ஆண்களால் குறிப்பாக தமது கணவன்மாரின் தூண்டுதலே இதற்கு பிரதான காரணம். அவ்வாறாக பெண்கரைளச் சீர்திருத்தம் செய்து சுயதொழிலுக்கு வழிகாட்டினால் அதன் மூலம் அவர்கள் குற்றச் செயல்களிலிருந்து விடுபட வாய்ப்புகள் உண்டு.

செல்வாக்கு மிக்க வடிசாராய முதலாளிகளை கைது செய்து, தண்டனைக்கு உட்படுத்தினால் தான் சமூக மாற்றம் ஏற்படும். இந்த விடயத்தில் மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சீர்திருத்தப் பணியில் ஈடுபட்ட பெண்கள் மீளவும் தவறு செய்ய சென்றதில்லை, இதனை பின்தொடர் நடவடிக்கைகளின் மூலம் அவதானித்திருக்கின்றோம்.

நாம் மேற்கொண்டு வரும் சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பணி தவறாளர்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்க பெருந்துணை புரிந்து வருகின்றது. இது மாபெரும் வெற்றியாகும் எனவும் எஸ். ஜரோனிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg