Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனிய தேர்தல்: தேர்தல் பிரசாரங்கள் தீவிரம்

In ஐரோப்பா
Published: 09:47 GMT, Sep 7, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Elakkiya

ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கலின் அகதிக் கொள்கையே குடியேற்றத்திற்கு எதிரான கட்சியான AFD யின் வெற்றிக்கு காரணமாக அமையும் என கட்சியின் முன்னணி வேட்பாளர் அலைஸ் வீடெல் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கடந்த 2015 ஆம் ஆண்டு அகதிகளுக்காக எல்லைகளை திறந்த ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கலின் முடிவு நெருக்கடிநிலையை உருவாக்கியது. இது எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் AFD நாடாளுமன்றம் நுழைவதற்கு வழிவகுக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் எதிர்வரும் 24 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சிகளுக்கு இடையில் பலத்த போட்டி நிலவுகின்றது. அதேவேளை தேர்தல் பிரசாரங்களும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg