Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கோடிக்கணக்கில் இலஞ்சம் பெற்ற வருமான வரித்துறை அதிகாரிகள்

In இந்தியா
Published: 12:22 GMT, Sep 7, 2017 |
0 Comments
1220
icon_com
This post was written by : Kemasiya
20_04_2017-itraidnoida

குஜராத் தனியார் நிறுவன முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவில் ஸ்டெர்லிங் பயோடெக் எனும் நிறுவனம் 200க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி பல நூறு கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நிறுவன அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் இங்கிலாந்துக்கு சொந்தமான விர்ஜின் தீவுகள் மற்றும் செஷெல்ஸ் நாட்டில் 100க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை உருவாக்கி கருப்புப் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதை அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். மேலும் இந்தியாவில் பல இடங்களில் 200க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை ஏற்படுத்தி பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரிய வந்தது.

போலி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை பினாமிகள் பெயரில் வங்கிகளில் முதலீடு செய்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இந்த முறைகேடுகளுக்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து இருப்பதும் உறுதிபடுத்தப்பட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள் இது தொடர்பாக அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது வருமான வரித்துறை மூத்த அதிகாரிகள் ஓஜா, சுபாஷ்சந் தரா, எம்.எஸ்.ராய் உள்பட சில அதிகாரிகள் இலஞ்சம் பெற்றிருப்பது தெரிய வந்தது. இதற்கான ஆவண ஆதாரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஓஜா ரூ.1 கோடியே 23 லட்சத்து 89 ஆயிரத்து 500 இலஞ்சம் பெற்றுள்ளார். இது தவிர ஓஜாவின் விமான பயண செலவுகள் அனைத்தையும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் ஏற்றுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரி சுபாஷ் சந்தராவுக்கு ரூ.90 இலட்சம் வரை இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு ராய் இலஞ்சமாக ரூ.30 இலட்சம் பெற்றதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. அதிகாரிகள் இது தொடர்பாக கடந்த மாதம் 30ஆம் திகதி வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரியவருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg