Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பங்களாதேஷிற்கு பதிலடி: தொடரை சமன் செய்தது அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Updated: 12:34 GMT, Sep 7, 2017 | Published: 12:21 GMT, Sep 7, 2017 |
0 Comments
1266
icon_com
This post was written by : Anojkiyan
aan

அவுஸ்ரேலிய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை சமநிலைப்படுத்தியுள்ளது.

சிட்டகாங் மைதானத்தில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 305 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக முஷ்பிகுர் ரஹிம் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் லியோன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலிய அணி, முதல் இன்னிங்ஸிற்காக 377 ஓட்டங்களை குவித்தது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டேவிட் வோர்னர் 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

72 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, அவுஸ்ரேலிய அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக முஷ்பிகுர் ரஹிம் 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் லியோன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் அவுஸ்ரேலிய அணிக்கு 86 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை ஒருநாள் மீதம் கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து அவுஸ்ரேலிய அணி கடந்து வெற்றியை பதிவுசெய்தது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், இப்போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமநிலைப்படுத்தியுள்ளது.

இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை லியோன் தட்டிச்சென்றார். இதேவேளை தொடர் நாயகள் விருது டேவிட் வோர்னருக்கும் லியோனுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg