Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வீட்டிலேயே தக்காளி சோஸ் செய்யும் முறை!

In
Published: 12:25 GMT, Sep 7, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Anojkiyan
toma

தேவையான பொருட்கள்

தக்காளி – ஒரு கிலோ
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 3 பல்
பட்டை – சிறிதளவு
கிராம்பு – சிறிதளவு
எலுமிச்சைப்பழச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நல்ல கெட்டியான தக்காளியாக வாங்கிக் கொள்ளவும். அப்போதுதான் சோஸ் கெட்டியாக நன்றாக இருக்கும். பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து அடுப்பை மூடி 2 விசில் சத்தம் வரை வேக விடவும். வெந்தவுடன் அடுப்பை திறந்து தக்காளியை ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.

இதை ஒரு பெரிய கண் உள்ள வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளி விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கைவிடாமல் கிளறவும். சோஸை ஒரு தட்டில் சிறிது ஊற்றினால், அது ஒட்டாமல் கெட்டியாக இருக்க வேண்டும். அதாவது, நீர்க்க இருக்கக் கூடாது. இதுவே பதம், இந்த பதம் வந்தவுடன் பிறகு அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் சுத்தமான போத்தலில் ஊற்றி மூடி வைக்கவும். இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg