Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எங்கள் வீட்டு நிலமை கிருஸ்ணசாமிக்கு எப்படி புரியும்: அனிதாவின் சகோதரன் கேள்வி?

In இந்தியா
Published: 12:38 GMT, Sep 7, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Kemasiya
fg

எங்கள் வீட்டு நிலைமை கிருஸ்ணசாமிக்கு எப்படி புரியும்? இவ்வாறு அனித்தாவின் சகோரன் மணிரத்னம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதமையினால் தற்கொலை செய்து கொண்ட அரியலூரை சேர்ந்த மருத்துவ பீட மாணவி அனித்தா மத்திய அரசுக்கும் நீட் தேர்வுக்கும் எதிரான விரோதிகளின் தூண்டுதல் காரணமாகவே தற்கொலை செய்த கொண்டார் என கிருஸ்ணசாமி தெரிவித்திருந்தார்.

மேலும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஸ்ணசாமி அனிதா பலரின் தூண்டுதலில் இடம்பெற்றது. எனவே இது குறித்து விசேட விசாரணை நடத்தப்பட வேண்டம். அவ்வாறு இது குறித்து விசாரணை இடம்பெறுமாயின் இது பலரின் தூண்டுதலில் இடம்பெற்ற தற்கொலை என்பதை எம்மால் நிரூபிக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்திற்கு பதில் கூறும் வகையில் அனிதாவின் சகோதரன் இன்று ஊடகவியலாளர்களிடம் எமது அரியலூர் வீட்டை கிருஸ்ணசாமிக்கு என்ன தெரியும். எனக்கு அவரை தெரியாது எனினும் நான் கூறிக்கொள்ள விரும்புவது எங்களுக்கு உதவியாக நின்றவர்கள் மீது பலிபோடவேண்டாம் என்பதே என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg