Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விண்வெளிக்கு பறக்கவுள்ள மாதவனும் தோனியும்! – நாசாவில் பயிற்சி

In சினிமா
Updated: 12:44 GMT, Sep 7, 2017 | Published: 12:44 GMT, Sep 7, 2017 |
0 Comments
2313
icon_com
This post was written by : Puvanes
dhoni_madhavan001

விண்வெளியை மையமாக வைத்து உருவாகவுள்ள பிரமாண்டமான பாலிவூட் திரைப்படத்தில் நடிக்க மாதவன் ஒப்பந்தமாகியுள்ளார்.

சந்தா மாமா தூர் கே என்ற இந்த விண்வெளிப்படத்தினை லாகூர் என்ற திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சஞ்சய் புரான் சிங் சௌஹான் இயக்கவுள்ளார்.

மேலும், தோனி- தி அன்டோல்டு ஸ்டோரி என்ற படத்தில் தோனியாகவே வாழ்ந்து காட்டிய சுஷாந்த் சிங் ராஜ்புடும், மாதவனுடன் இணைந்து விண்வெளி வீரராக நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படத்தில் விண்வெளி வீரர்களாக இருவரும் வலம் வரவுள்ளதால், தற்போது நாசாவில் சிறப்பு பயிற்சிகளை மாதவனும், சுஷாந்த் சிங்கும் பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, அப்பலோ 13 மற்றும் தி மார்ஷியன் என்ற விண்வெளி வெற்றிப்படங்களை உருவாக்கிய ஹொலிவூட் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் படத்தில் பணியாற்றவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg