Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா நாளை புதிய ஏவுகணையை ஏவலாம்: ஜப்பான் எச்சரிக்கை

In உலகம்
Published: 05:14 GMT, Sep 8, 2017 |
0 Comments
1301
This post was written by : Elakkiya

தேசிய தினமான நாளை (சனிக்கிழமை) வடகொரியா புதிய அணுசக்தி அல்லது ஏவுகணை சோதனையை நடத்தலாம் என ஜப்பான் எச்சரித்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின்போது ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இசுனோரி ஒனோடெரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேச கண்டனங்களையும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் விதிமுறைகளையும் மீறி தொடர்ச்சியாக அணுவாயுத சோதனையையும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையையும் நடத்திவரும் வடகொரியா நாளை தனது தேசிய தினத்தை கொண்டாடவுள்ளது.

இந்நிலையில் புதிதாக ஒரு நீண்டதூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  வடகொரியா அண்மையில் தனது ஆறாவது ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg