Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்க ஓபன்: அசத்தினார் ஸ்டீபன்ஸ் – அதிர்ந்தார் வீனஸ்

In டெனிஸ்
Published: 05:17 GMT, Sep 8, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Sujitharan

அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

இவருக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியீட்டிய சகநாட்டு வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (Sloane Stephens), முதன் முறையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்காவின் நயூயோர்க் நகரில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், வெற்றி வாய்ப்பு இருவருக்கும் சமமாக இருந்தது, முதல் செட்டை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் கைப்பற்ற, இரண்டாம் செட்டை வீனஸ் வில்லியம்ஸ் தனதாக்கினார்.

இதனால் இறுதிப் போட்டிக்குள் கால் பதிக்கும் அந்த வீராங்கனை யார்? என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது செட், பலத்த எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமானது.

மிகவும் விறுவிறுப்பான நடைபெற்ற மூன்றாவது செட்டில், ஒரு கட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸின் வெற்றி பிரகாசமாக இருந்தது.

என்றபோதிலும், சுதாகரித்து ஆடிய ஸ்லோன் ஸ்டீபன்ஸ், வீனஸிடமிருந்த வெற்றி வாய்ப்பை தன் பக்கம் திருப்பி, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இறுதியில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (Sloane Stephens) 6-1, 0-6, 7-5 என்ற கணக்கில் வீனஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg