Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அருளினியனின் ‘கேரள டயரீஸ்’ நூல் வெளியீடு!

In இலங்கை
Published: 05:25 GMT, Sep 8, 2017 |
0 Comments
1379
icon_com
This post was written by : Ravivarman
both page

கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5.30 இற்கு எழுத்தாளர் அருளினியனின் ‘கேரள டயரீஸ்’ நூல் வெளியிடப்பட இருக்கிறது.

சேர நாடென வழங்கப்படும் கேரள நாட்டிற்கும் ஈழத்திற்குமிடையான ஊடாட்டத்தை தேடும் முனைப்பாக ‘வேர் தேடி’ எனும் பொருளிலே கட்டுரைகளை கொண்டுள்ள இந்நூல் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் யாழில் வெளியிடப்பட்டிருந்தது.

அகில இலங்கைக் கம்பன் கழகத் தலைவர் சொபிசன் தலைமையில் நிகழவிருக்கும் கொழும்பு வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் மனோகணேசன் கலந்துகொள்வதோடு, ஈழத்தின் புகழ் பெற்ற அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கின்றனர்.

தமிழ் இரசிகர்களையும் ஆர்வலர்களையும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg