Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேரளாவில் தொடரும் மழை: தொடரும் பாதிப்புக்கள்

In இந்தியா
Published: 05:36 GMT, Sep 8, 2017 |
0 Comments
1154
This post was written by : Kemasiya
gfhf

கேரளா முழுவதும் மீண்டும் கன மழை பெய்து வருகின்றது. இந் நிலையில் வெள்ளம் அதிகமாகியுள்ளமையினால் போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்பட்டதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கனமழை காரணமாக திருவனந்தபுரம் தம்பானூர் ரெயில்நிலையத்தில் தண்டவாளத்தை மழை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 12 ரெயில்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடல் சீரற்று காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அனர்த்தமுகாமை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24மணி நேரத்திற்கு மழை கடுமையாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்கவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் மாவட்ட ஆளுனர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg