Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அகதிகளை தடுக்கும் ட்ரம்பின் முயற்சி- மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி

In
Published: 06:12 GMT, Sep 8, 2017 |
0 Comments
1336
icon_com
This post was written by : Elakkiya

அமெரிக்காவிற்குள் நுழையும் பெரும்பாலான அகதிகளை தற்காலிகமாக தடை செய்யும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சியை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத வகையில் விதிக்கப்பட்ட ட்ரம்பின் பயணத் தடை உத்தரவின் பிரகாரம், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, மைத்துனர் மற்றும் மருமகள் ஆகியோர் அமெரிக்காவில் வசித்தாலும் அது செல்லுபடியாகும் வதிவிட விண்ணப்பமாகக் கருதப்படாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விலக்களித்து அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த நிபந்தனைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவாக வழங்கவில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பகுதியளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ட்ரம்பின் பயணத்தடை உத்தரவின் பிரகாரம், அமெரிக்காவில் வதிவிடம் பெற விரும்பும் லிபியா, ஈரான், சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமென் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நெருங்கிய உறவினர்களை வணிக பிணைப்புகளை கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg