Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சவுதா அமைப்பின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு சோதனை

In இந்தியா
Published: 06:18 GMT, Sep 8, 2017 |
0 Comments
1263
icon_com
This post was written by : Kemasiya

பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் சிர்சாவில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலமை அலுவலகம் இன்று(வெள்ளிக்கிழமை) பொலிஸாரினால் சோதனை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப் பகதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேரா சச்சா சவதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் இரண்டு பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் 20 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக குர்மீத் ராமிற்கு ஆதரவானோர் மேற்கொண்ட கலவரத்தில் பஞ்சாப் ஹரியானாவை சேர்ந்த 38பேர் உயிரிழந்ததுடன். பல பொதுச் சொத்துக்களும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இன்று காலை தேரா சச்சா சவுதா அலுவலகத்தினை நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் பொலிஸார் சோதனை செய்தனர்.

குறித்த சோதனையின் போது அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக 41 பாராமிலிடரி படைவீரர்கள், 4இராணுவ கம்பெனிகள், 4 மாவட்ட பொலிஸார், மற்றும் சிறப்பு ஆயதப்படை பிரிவினர், ஆகியோர் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த சோதனையை முன்னிட்டு சிர்சாவில் சில இடங்களில் ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg