Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நான்கு நாயகிகளுடன் விஜய் அண்டனி!

In சினிமா
Published: 08:23 GMT, Sep 8, 2017 |
0 Comments
1306
icon_com
This post was written by : Surenth
Vijay Antony

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் அண்டனி, தற்போது நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது ஜி.சீனிவாசன் இயக்கத்தில் ‘அண்ணாதுரை’ திரைப்படத்திலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் `காளி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக 4 நாயகிகள் நடித்து வருகின்றனர். சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி உள்ளிட்ட 4 நாயகிகள் முக்கிய கதாபாத்திரதத்தில் நடித்து வருகின்றனர் என்பதை இயக்குநர் கிருத்திகா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

`காளி’ மற்றும் ‘அண்ணாதுரை’ திரைப்படங்களின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேஷன் சார்பாக பாத்திமா விஜய் அண்டனி தயாரித்து வருகிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg