Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் மக்ரோங்

In ஐரோப்பா
Published: 07:41 GMT, Sep 8, 2017 |
0 Comments
1334
This post was written by : Elakkiya

கிரேக்க கடன் தொடர்பான பேச்சுவாத்தைகளில் சர்வதேச நாணய நிதியம் சிறந்த நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் வலியுறுத்தியுள்ளார்.

எதென்சில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிம்ராஸூடனான கூட்டு செய்தியாளர் மாநாட்டில் மக்ரோங் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, கிரேக்க கடன் விவகாரத்தின் தற்போதைய பேச்சுவார்த்தைகளின் நிறைவில் மேலதிக நிபந்தனைகள் இன்றி இருக்க வேண்டும் என்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் என்று மக்ரோங் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த கிரேக்க பிரதமர் சிப்ராஸ், நிதி உதவிகளுக்காக சர்வதேச நாணய நிதியம் போன்ற மூன்றாம் தரப்பினரிடம் திரும்பாது ஐரோப்பா அதன் உறுப்பு நாடுகளின் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக புதிய நிறுவனங்களை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் செல்வாக்கற்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு ஈடான கிரேக்கத்தின் இரண்டு வெளிநாட்டு பிணை எடுப்புக்களில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து சர்வதேச நாணய நிதியம் பங்கெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg