Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

திண்டாடும் அரசாங்கம்: மஹிந்தவுடன் ரகசிய பேச்சு!

In இலங்கை
Updated: 08:17 GMT, Sep 8, 2017 | Published: 07:45 GMT, Sep 8, 2017 |
0 Comments
2366
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
mahinda vs maithri

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ரகசியமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, அருந்திக்க பெர்ணான்டோ, துலிப் விஜேசேகர, டி.பி.ஏக்கநாயக்க ஆகியோருடன் பிரதி அமைச்சர்கள் சிலரும் சென்று கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தாம் அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக குறிப்பிட்டிருந்தனர்.

எனினும், பிளவுகள் இன்றி கூட்டரசாங்கத்தை கொண்டுசெல்ல பாடுபாடும் ஜனாதிபதி மைத்திரி, இவர்களை சமரசப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டரசாங்கத்தில் தற்போது உட்கட்சி பூசல்களும் வலுப்பெற்று வரும் நிலையில், இதனை பயன்படுத்தி தமது அணியை பலப்படுத்தும் முனைப்பில் மஹிந்த அணியினர் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg