Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அயர்லாந்து எல்லைப் பிரச்சினையை தீர்க்க முடியும்: பொரிஸ் ஜோன்சன்

In
Published: 08:08 GMT, Sep 8, 2017 |
0 Comments
1362
This post was written by : Elakkiya

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரித்தானியாவின் பேச்சுவார்த்தைகளில் அயர்லாந்து எல்லைக்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்பது மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட விடயமல்ல என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள பொரிஸ் ஜோன்சன் எஸ்தோனிய தலைநகர் டலினில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, “அயர்லாந்து எல்லை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டுவருவதற்கு ஒன்றாக பணியாற்றலாம் என்று நினைக்கின்றேன். அது மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்ட விடயம் அல்ல. நாம் நூற்றாண்டு காலமாக அயர்லாந்தின் வடக்கு மற்றும் தெற்குக்கு இடையில் பொதுவான பயணப் பகுதியை பெற்றுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பிலான பிரித்தானியாவின் திட்டங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பிரெக்சிற் பேச்சுவார்த்தையாளர் நேற்று (வியாழக்கிழமை) கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg