Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே நாளில் மூன்று ரயில்கள் தடம் புரள்வு: ரயில்வே அமைச்சர் அவசர கூட்டம்

In இந்தியா
Updated: 09:59 GMT, Sep 8, 2017 | Published: 09:56 GMT, Sep 8, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Kemasiya
fhrfhn

ஒரே நாளில் மூன்று ரயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில், உயரதிகாரிகளுடன் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அவசர கூட்டத்தை நடத்தியுள்ளார்.

மகாராஸ்டிரா மாநிலம் கந்தலாவில் சரக்கு ரயில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ராவில் பயணிகள் ரயில் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜ்தானி விரைவு ரயில் என மூன்று ரயில்கள் நேற்றய தினம்(வியாழக்கிழமை) ஒரே நாளில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாயின.

இது தொடர்பில் நெற்று திடீரென நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆளில்லாத ரயில்வே கதவுகள் மற்றும் தடம் புரள்வது ஆகியவைதான் ரெயில் விபத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்பட்டது.

இதனையடுத்து, ஒராண்டுக்குள் அனைத்து ஆளில்லாத ரயில்வே கதவுகளையும் அகற்றுதல், பனிமூட்டமான பகுதிகளில் செல்லும் ரயில்களின் முகப்புகளில் சிறப்பு விளக்குகள் பொருத்துதல், போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg