Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்ய இனப்படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 12:24 GMT, Sep 8, 2017 | Published: 12:23 GMT, Sep 8, 2017 |
0 Comments
1188
This post was written by : Ravivarman

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் இனப்படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.

முஸ்லிம் உரிமைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி ஆர்ப்பாட்டம் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மியன்மார் தூதரகம் வரை பேரணியாக சென்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்துமாறும் ஆங் சாங் சூகி இற்கு வழங்கப்பட்டிருக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை திரும்ப பெறுமாறும் கோஷம் எழுப்பியவாறு தமது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார், எம்.ஐ.எம். மன்சூர், மாகாண சபை உறுப்பினர் அர்சத் நிசாம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, முன்னாள் நகரசபை உறுப்பினர் அப்துல் சத்தார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg