Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அரச அதிகாரிகள் எவ்வாறு 50 மில்லியன் ரூபா செலுத்துவார்கள்: மஹிந்த கேள்வி

In இலங்கை
Updated: 13:34 GMT, Sep 8, 2017 | Published: 13:34 GMT, Sep 8, 2017 |
0 Comments
1337
icon_com
This post was written by : Anojkiyan
Sri Lankan President Mahinda Rajapaksa reacts

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து வியப்படைந்ததாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரச அதிகாரிகள் எவ்வாறு 50 மில்லியன் ரூபா செலுத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலதா மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும், அரச அதிகாரிகளுக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை சம்பந்தமாக மீண்டும் பரிசீலித்து பார்க்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் விகாரைகளுக்கு துணிகள் விநியோகித்தமை தொடர்பில் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg